இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு கடல் வழியாக தங்கம் கடத்தல்

0 1914

இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு கடல் வழியாக கடத்தி வரப்பட்ட 2 கோடி ரூபாய் மதிப்பிலான மூன்றரை கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. மீனவர் போர்வையில் கடத்தலில் ஈடுபட்ட இலங்கையைச் சேர்ந்த மூவர் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்திய கடற்பரப்பில் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த விசை படகு ஒன்று, இலங்கையைச் சேர்ந்த பைபர் படகு அருகே நின்றுக் கொண்டிருப்பதை ரோந்து பணியில் இருந்த ஹெலிகாப்பர் மூலம் கடற்படையினர் கண்டனர்.

ராமேஸ்வரம் விசைப்படகில் இருந்த நான்கு பேர் தப்பிச் சென்ற நிலையில், இலங்கை படகில் இருந்த மூன்று பேரை மடக்கிப் பிடித்த இந்திய கடற்படையினர் தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரைக்கு அழைத்து வந்து தமிழக கடலோர காவல் குழுமத்தினரிடம் ஒப்படைத்தனர். இதற்கிடையே இந்திய கடற்படையினர் தெரிவித்த படகு எண்ணை வைத்து ராமேஸ்வரம் படகில் இருந்த 4 பேரும் தமிழக கடலோர காவல் குழுமத்தினரால் மடக்கிப் பிடிக்கப்பட்டனர்.

image

அவர்களை தனித்தனி இடத்தில் வைத்து விசாரணை நடத்தப்பட்ட நிலையில், இருத்தரப்பினரும் தங்களை மீனவர்கள் என்று பல மணி நேரமாக கூறி வந்தனர். பின்னர் உளவுத்துறை மற்றும் மெரைன் போலீசாரின் சிறப்பு கவனிப்பால் இலங்கையில் இருந்து மூன்றரை கிலோ தங்கம் கடத்திவரப்பட்டதை ஒப்புக் கொண்டனர்.

image

இலங்கை கடத்தல்காரர்கள் பிடிப்பட்ட பைபர் படகை சோதனை செய்த மெரைன் போலீசார், அதில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 35 தங்க கட்டிகள் கொண்ட மூன்றரை கிலோ கடத்தல் தங்கம் மற்றும் இலங்கை மீனவ அட்டைகளை பறிமுதல் செய்தனர்.

image

சுமார் 24 மணி நேரம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி கடத்தலில் ஈடுபட்ட இலங்கையைச் சேர்ந்த மூவரையும், ராமேஸ்வரத்தை சேர்ந்த நான்கு பேர் என மொத்தம் ஏழு பேரை தமிழக கடலோர காவல் குழுமத்தினர் கைது செய்தனர். கடந்த இரண்டு நாட்களில் இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு கடல் வழியாக கடத்தி வரப்பட்ட 21 கிலோ தங்கம் இந்திய மற்றும் இலங்கை கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments