அமித்ஷாவின் வீடு நோக்கி சென்ற போராட்டக்காரர்கள் தடுத்து நிறுத்தம்

0 1941

குடியுரிமை திருத்த சட்டத்தை வாபஸ் பெறக் கோரி உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் வீடு நோக்கி பேரணியாக சென்ற ஷாகீன் பாக் போராட்டக்காரர்கள் உரிய அனுமதியின்றி சென்றதாக கூறி தடுத்து நிறுத்தப்பட்டனர்.

குடியுரிமை திருத்த சட்டத்தை வாபஸ் பெறக்கோரி, டெல்லி ஷாகீன் பாக் பகுதியில் சுமார் 2 மாத காலமாக தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் வீடு நோக்கி போராட்டக்காரர்கள் பேரணியாக சென்றனர்.

அப்போது, போராட்டக்காரர்களை தடுத்து நிறுத்திய போலீசார், அமித்ஷாவிடமிருந்து இதற்கான முன் அனுமதி பெறப்படவில்லை என கூறி பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதனையடுத்து உரிய அனுமதி கிடைக்கும் வரை ஷாகீன் பாக்கிலேயே போராட்டத்தை தொடருவது என முடிவெடுத்த போராட்டக்காரர்கள், அங்கிருந்து கலைந்து சென்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments