வேலை நிறுத்தம் தொடரும் - லாரி உரிமையாளர் சங்கம்

0 956

ஆவின் நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை நீட்டிக்கும் வரை தங்களின் வேலைநிறுத்தம் தொடரும் என டேங்கர் லாரி உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

ஆவின் நிறுவனத்துடனான ஒப்பந்தம் 2018ம் ஆண்டில் இருந்து நீட்டிக்கவில்லை எனக்கூறி டேங்கர் லாரி சங்கத்தினர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் சென்னை அசோக் நகரில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய அச்சங்கத்தின் செயலாளர் வைத்தியநாதன், போராட்டத்தால் 1, 500 பேரின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

கிறிஸ்டி நிறுவனம் ஆவின் டேங்கர் லாரி டெண்டரில் தலையிட்டு முறைகேட்டில் ஈடுபடுவதுடன், பாதுகாப்பற்ற முறையில் லாரிகளை இயக்குவதாக அவர் புகார் கூறினார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments