கொரானா அச்சுறுத்தலால் 22 நாட்களில் முதல் முறையாக பொதுநிகழ்ச்சியில் பங்கேற்ற கிம்ஜாங் உன்

0 1609

தனது தந்தையும், முன்னாள் அதிபருமான இரண்டாம் கிம் ஜாங்கின் பிறந்தநாளையொட்டி அவரது உருவச்சிலைக்கு வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் மரியாதை செலுத்தினார்.

பியாங்யாங் பகுதியில் அமைந்துள்ள கும்சுசான் ((Kumsusan)) சூரிய மாளிகையில் உள்ள சிலைக்கு, நாட்டின் உயரதிகாரிகள் புடைசூழ கிம்ஜாங் உன் மரியாதை செலுத்தினார். கொரானா அச்சுறுத்தலுக்கிடையே கடந்த 22 நாட்களில் கிம்ஜாங் உன் முதல் முறையாக பொதுநிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார்.

கடைசியாக கடந்த ஜனவரி 25ம் தேதி சந்திர புத்தாண்டு நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்தார். அதேபோன்று ராணுவத்தினர் மற்றும் பொதுமக்கள் கொட்டும் பனியையும் பொருட்படுத்தாமல் நடந்து வந்து இரண்டாம் கிம் ஜாங் மற்றும் அவரது தந்தையான கிம் சங்-கிற்கு மலர் வைத்து மரியாதை செலுத்தினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments