ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மண்ணில் பகலிரவு டெஸ்ட்..!

0 1100

ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிராக இந்திய அணி பகலிரவு டெஸ்ட் போட்டிகளில் விளையாட சம்மதம் தெரிவித்துள்ளதாக பிசிசிஐ தலைவர் கங்குலி தெரிவித்துள்ளார்.

பகலிரவு டெஸ்ட் போட்டிகளுக்கு தொடர்ந்து மறுப்பு தெரிவித்துவந்த இந்திய அணி, தனது முடிவை மாற்றிக்கொண்டு கடந்த ஆண்டு வங்கதேசத்துக்கு எதிராக முதல்முறையாக பகலிரவு போட்டியில் விளையாடியது.

இந்நிலையில் வருகிற நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ள டெஸ்ட் தொடர் மற்றும் அடுத்த ஆண்டு இங்கிலாந்தில் நடைபெறவுள்ள டெஸ்ட் தொடர் ஆகியவற்றில் தலா ஒரு போட்டியை பகலிரவு ஆட்டமாக விளையாட இந்தியா முடிவு செய்துள்ளதாக பிசிசிஐ தலைவர் கங்குலி தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments