நீண்ட இடைவெளிக்கு பிறகு களத்துக்கு திரும்பும் தோனி..! ரசிகர்கள் உற்சாகம்

0 1925

நீண்ட இடைவெளிக்கு பின்னர் ஐபிஎல் மூலமாக கிரிக்கெட்டுக்கு திரும்பவுள்ள மகேந்திர சிங் தோனி, மார்ச் 1 முதல் தீவிர கிரிக்கெட் பயிற்சியில் ஈடுபடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த ஆண்டு நடைபெற்ற 50 ஓவர் உலக கோப்பை தொடருக்கு பின்னர் எந்தவித போட்டிகளிலும் தோனி விளையாடவில்லை. இதனிடையே அடுத்த மாதம் தொடங்கவுள்ள ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக தோனி களமிறங்கவுள்ளார்.

இதையொட்டி, மார்ச் 1ஆம் தேதி சென்னைக்கு வரும் தோனி, சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் சக வீரர்களுடன் இணைந்து தீவிர பயிற்சியில் ஈடுபடவுள்ளதாக கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments