பேஷன் ஷோவை ரத்து செய்ய வலியுறுத்தி சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் போராட்டம்

0 836

லண்டனில் நடைபெற்று வரும் பேஷன் ஷோவை ரத்து செய்ய வலியுறுத்தி ஏராளமான சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொழிற்சாலைகள் உமிழும் கார்பன் அளவை கட்டுப்படுத்த வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருபவர்கள், கடந்த 14 ஆம் தேதியில் இருந்து 18 ஆம் தேதி வரை லண்டனில் நடைபெறும் உலகப்புகழ்பெற்ற பேஷன் ஷோவை ரத்து செய்ய வலியுறுத்தி மறியலில் ஈடுபட்டனர். மேலும், இறந்து போன பூமியில் பேஷன் இல்லை போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் கோஷமிட்டனர்.

இசைக்கருவிகளுடனும் வண்ண வண்ண புகைகளுடன் 100க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டு மக்கள் கவனத்தை ஈர்த்தனர். இதனால் வெஸ்மின்ஸ்டரில் உள்ள முக்கிய வீதிகளில் போக்குவரத்து முடங்கியது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments