அப்ரிடிக்கு 5ஆவது பெண் குழந்தை - ரசிகர்களுக்கு ஓர் கோரிக்கை

0 4565

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் அப்ரிடி மற்றும் அவரது மனைவிக்கு 5ஆவது பெண் குழந்தை பிறந்துள்ளது.

அப்ரிடிக்கு ஏற்கெனவே 4 மகள்கள் உள்ள நிலையில், அவரது மனைவி நாடியா 5ஆவதாக கர்ப்பம் தரித்திருந்தார். இந்நிலையில் தற்போது அவருக்கு மீண்டும் பெண் குழந்தை பிறந்துள்ளது.

அந்த குழந்தையுடன் எடுத்த புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டு, ஏற்கெனவே முதல் 4 மகள்களுக்கு ஏ ((A)) எழுத்தில் ஆரம்பிக்கும் வகையில் பெயர் வைத்தது போல இக்குழந்தைக்கும் பெயர் வைக்க விரும்புவதாகவும், ஆதலால் நல்ல பெயரை தெரிவிப்போருக்கு பரிசு வழங்க போவதாகவும் குறிப்பிட்டுள்ளார். இதைக் கண்ட ரசிகர்கள், பல பெயர்களை அவருக்கு முன்மொழிந்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments