முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு பிரேமலதா விஜயகாந்த் வாழ்த்து
நான்காம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு வாழ்த்து தெரிவிப்பதாக தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.
சென்னை கோயம்பேடு தலைமை அலுவலகத்தில், மாற்றுக் கட்சியை சேர்ந்தவர்கள் இணையும் நிகழ்ச்சியில் பேசிய அவர் மீதம் உள்ள ஒரு ஆண்டையும் மக்கள் போற்றும் ஆட்சியாக தொடர வேண்டும் என்றார். மேலும் சமூக வலைத்தளங்களில் அதிகம் விரும்பப்படுகிற தலைவராக விஜயகாந்த் திகழ்வதாகவும் பிரேமலதா கூறினார்.
பின்னர் பேசிய விஜயகாந்த், தேமுதிகவில் இணைந்த இளைஞர்களுக்கு வாழ்த்து தெரிவித்து, நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம் என்றார்.
Comments