குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்ற கவிஞருக்கு ரூ.1 கோடி அபராதம்

0 773

உத்தரபிரதேச மாநிலத்தில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்ற காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கவிஞருக்கு 1 கோடியே 4 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மொராதாபாத் மாவட்டம் ஈத்கா பகுதியில் கடந்த ஜனவரி 29ம் தேதி முதல் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக போராட்டம் நடைபெற்று வருகிறது. பெண்கள், குழந்தைகள் உட்பட ஏராளமானோர் பங்கேற்றுள்ள இந்த போராட்டத்தில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கவிஞரான இம்ரான் பிரதாப்கர்கியும் கலந்து கொண்டார்.

இந்நிலையில் அவருக்கு 1 கோடியே 4 லட்ச ரூபாய் அபராதம் விதித்து மாவட்ட ஆட்சியர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். போராட்டம் நடைபெறும் பகுதியில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளுக்காகவும், 144 தடை உத்தரவை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதற்காகவும் அபராதம் விதிக்கப்பட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments