குரூப்-4 சான்றிதழ் சரிபார்ப்பு குறித்து டிஎன்பிஎஸ்சி விளக்கம்
குரூப்-4 தேர்வில் கூடுதலாக சான்றிதழ் சரிபார்ப்புக்கு அனுமதிக்கப்பட்ட 27 தேர்வர்கள் மட்டும் தங்களது சான்றிதழ்களின் நகல்களை இ-சேவை மையங்களில் பதிவு செய்யுமாறு டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.
கடந்த 12ம் தேதி டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட அறிவிப்பில், குரூப்-4 தேர்வுக்கு தற்காலிகமாக சான்றிதழ் சரிபார்ப்புக்காக அனுமதிக்கப்பட்டவர்கள் 18ம் தேதிக்குள் தேர்வாணைய இணைய தளம் மற்றும் அரசு இ-சேவை மையத்தில் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யுமாறு தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஏற்கெனவே சான்றிதழ்களை பதிவேற்றம் செய்தவர்கள் மீண்டும் பதிவேற்றம் செய்ய வேண்டுமா என்ற கேள்வி எழுந்த நிலையில், டிஎன்பிஎஸ்சி விளக்கம் அளித்துள்ளது. கலந்தாய்வுக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் யாரும் தங்களது சான்றிதழ்களை மீண்டும் பதிவேற்றம் செய்யத் தேவையில்லை என கூறப்பட்டுள்ளது.
Comments