ஏ.சி.வெடித்து தீ விபத்து - சிஆர்பிஎப் வீரர் உயிரிழப்பு, மனைவி கவலைக்கிடம்

0 1317

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே ஏ.சி.வெடித்ததில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி சிஆர்பிஎப் வீரர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், மனைவி கவலைக்கிடமாக உள்ளார்.

வக்கணம்பட்டியைச் சேர்ந்த சண்முகம் செங்கல்பட்டு ரயில்வே பாதுகாப்புப்படையில் காவலராக பணியாற்றி வந்தார். இவரின் வீட்டில் நள்ளிரவில் ஏ.சி.வெடித்து படுக்கை அறைமுழுவதும் தீப்பற்றியதில், அங்கு தூங்கிக்கொண்டிருந்த சண்முகத்தின் மீதும் தீப்பிடித்துள்ளது.

அவரை காப்பாற்றச்சென்ற மனைவியும் தீயில் சிக்க, அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் இருவரையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

90 சதவீதம் காயங்களுடன் சென்னை கீழ்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சண்முகம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரின் மனைவி உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், தீ விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments