ஒலிம்பிக் ட்விட்டர் பக்கம் முடக்கம் !!
ஒலிம்பிக் மற்றும் சர்வதேச ஒலிம்பிக் சம்மேளனத்தின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கம் ஹேக் செய்து தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளது.
உலகின் முதன்மையான விளையாட்டு போட்டியாக கருதப்படும் ஒலிம்பிக் போட்டிகள் இந்த ஆண்டு ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடக்கவுள்ளன. உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளை சேர்ந்த வீரர்கள் இதில் பங்கேற்பர். இந்நிலையில் ஒலிம்பிக் மற்றும் சர்வதேச ஒலிம்பிக் சம்மேளனத்தின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கங்கள் ஹேக் செய்யப்பட்டு முடக்கப்பட்டுள்ளதாக ட்விட்டர் தெரிவித்து உள்ளது.
இதுகுறித்து ட்விட்டர் நிறுவனம், கூடிய விரைவில் இந்த பிரச்சனைக்கு தீர்வு காணப்படும் எனவும், ஒலிம்பிக் ட்விட்டர் பக்கங்கள் ஹேக் செய்தது பற்றி விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் புகழ்பெற்ற சூப்பர் பௌல், சான் பிரான்சிஸ்கோ உள்ளிட்ட அமெரிக்க கால்பந்து அணிகளின் ட்விட்டர் பக்கங்கள் முடக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Comments