காயத்திலிருந்து மீண்ட இஷாந்த் சர்மா..நியூசிலாந்து டெஸ்ட்டில் பங்கேற்கிறார்

0 632

ரஞ்சி கிரிக்கெட் போட்டியில் ஏற்பட்ட காயத்திலிருந்து மீண்ட இஷாந்த் சர்மா நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்க உள்ளார்.

கடந்த மாதம் நடந்த ரஞ்சி கிரிக்கெட் போட்டியில் டெல்லி அணிக்காக விளையாடிய இந்திய அணியின் மூத்த வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா, விதர்பா அணிக்கு எதிராக விளையாடும் போது காயமடைந்தார். இதனால் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அவர் விளையாடுவது சந்தேகமானது. இந்நிலையில் அவர் காயத்திலிருந்து மீண்டு முழு உடல் தகுதியை அடைந்தார் என தேசிய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

இது குறித்து ஐசிசி யும் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் செய்தி வெளியிட்டு உள்ளது. அதில் "இஷாந்த் சர்மா முழு உடல்தகுதி அடைந்துவிட்டதாகவும்,நியூசிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் அவர் இணையவுள்ளார்" எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா-நியூசிலாந்து இடையேயான டெஸ்ட் தொடர் வரும் பிப்ரவரி 21ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில் மூத்த வீரரான இஷாந்த் சர்மா மீண்டும் அணிக்கு திரும்புவது அணிக்கு கூடுதல் பலத்தை தரும் என கிரிக்கெட் ரசிகர்கள் தெரிவிக்கின்றனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments