காதலைக் கண்டித்ததால் காதலனுடன் சேர்ந்து தாயை கொலை செய்த கொடூர மகள்

0 1106

காதலைக் கண்டித்ததால் டெல்லியில் பெண் காவலரை சொந்த மகளே காதலனுடன் சேர்ந்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லி போலீசில் தலைமை காவலராக பணிபுரிந்து வரும் பெண் காவலரின் 10ம் வகுப்பு படித்து வரும் மகளும், அவர்களின் பக்கத்து வீட்டில் வசிக்கும் ஜித்தேந்திர குமார் எனும் 19 வயது இளைஞரும் காதலித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் காதலர் தினத்தன்று ஜித்தேந்திரா வீட்டுக்கு வந்ததால், காதல் விவகாரம் தெரியவர, பெண் காவலர் மகளை அடித்து கண்டித்துள்ளார். இதனால் காதலனுடன் சேர்ந்து தாயை கொலை செய்ய திட்டமிட்ட மகள், பெண் காவலரின் முகத்தில் மிளகாய் பொடியை தூவியுள்ளார்.

பின்னர் இருவரும் சேர்ந்து கிரைண்டர் கல்லால் முகத்தில் அடித்தும், கழுத்தில் கயிற்றால் இறுக்கியும் கொலை செய்துள்ளனர். இது குறித்து பெண் காவலரின் கணவர் அளித்த புகாரின் பேரில் மகளையும், காதலன் ஜித்தேந்திராவையும் போலீசார் கைது செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments