தயாநிதி மாறனுக்கு எதிராக அவதூறு வழக்கு தொடுக்க அனுமதி

0 1623

டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு விவகாரத்தில் அமைச்சர் ஜெயக்குமாரை தொடர்புப்படுத்தி பேட்டியளித்த திமுக எம்.பி. தயாநிதி மாறன் மீது நீதிமன்றத்தில் அவதூறு வழக்குத் தொடுக்க தமிழக அரசு அனுமதியளித்துள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், தயாநிதி மாறன் பெரியமேட்டில் கடந்த 30ம் தேதி அமைச்சர் ஜெயக்குமாரை குற்றம்சாட்டி அளித்த பேட்டி நாளிதழில் செய்தியாக வெளியாகியிருப்பது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அவரது பேட்டியானது உண்மை மற்றும் நம்பிக்கைக்கு எதிரானது என்றும், பொதுநலனுக்கு எதிராக, வேண்டுமென்று அளிக்கப்பட்ட பேட்டி என்றும், இதன்மூலம் ஐபிசி 499, 500ஆவது பிரிவுகளின் கீழ் தயாநிதி மாறன் குற்றமிழைத்துள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே தயாநிதி மாறன் மீது 1974ம் ஆண்டு மத்திய சட்டத்தின்கீழ் அவதூறு வழக்குத் தொடுக்க ஆளுநரால் அனுமதியளிக்கப்பட்டு இருப்பதாகவும் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments