அமெரிக்காவுடனான ஐரோப்பிய ஒன்றியத்தின் உபரி வர்த்தகம் புதிய உச்சம்

0 1163

அதிபர் டிரம்பின் வரி விதிப்பு அச்சுறுத்தலுக்கு இடையிலும் அமெரிக்காவுடனான ஐரோப்பிய ஒன்றியத்தின் உபரி வர்த்தகம் 2019ம் ஆண்டில் புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

2019ல் அமெரிக்காவுடனான ஐரோப்பிய ஒன்றியத்தின் உபரி வர்த்தகம் 165.5 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்ந்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியம் 231.7 பில்லியன் யூரோக்கள் அளவுக்கு இறக்குமதியும், அதைவிட அதிகமாக 384.4 யூரோக்கள் அளவுக்கு ஏற்றுமதியும் செய்கிறது.

2018ம் ஆண்டைக் காட்டிலும் இது 11 சதவீதம் அதிகமாகும். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள டிரம்ப், ஐரோப்பிய ஒன்றியம் தங்களை மிகவும் மோசமாக நடத்தி வருவதாகவும், அந்நாட்டுடனான வர்த்தக பேச்சுவார்த்தை குறித்து இவ்வாரத்தில் மீண்டும் கவனம் செலுத்த இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

சீனாவுடனான புதிய வர்த்தக ஒப்பந்தத்தை தொடர்ந்து, நவம்பர் மாதம் நடைபெறும் அதிபர் தேர்தலுக்கு முன்னதாக ஐரோப்பிய ஒன்றியத்துடனும் புதிய வர்த்தக ஒப்பந்தத்தை எட்டிவிட முயற்சித்து வரும் டிரம்ப், பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தால் அந்நாட்டு பொருட்களுக்கான வரியை உயர்த்தப்போவதாகவும் எச்சரித்து வருகிறார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments