CAA, NPR, NRCக்கு எதிரான போராட்டங்களை கட்டுப்படுத்த சிறப்பு அதிகாரிகள்

0 1604

தமிழகத்தில் சிஏஏ, என்பிஆர், என்ஆர்சி ஆகியவற்றுக்கு எதிரான போராட்டங்களை கட்டுப்படுத்தவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் 6 சிறப்பு அதிகாரிகளை நியமித்து தமிழக டி.ஜி.பி ஜே.கே.திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு ஏடிஜிபி அபய்குமார் சிங், மதுரை நகரம், மதுரை சரகம் பகுதிகளுக்கும், காவல் துறை செயலாக்க ஏடிஜிபி மகேஷ்குமார் அகர்வால் மற்றும் பொருளாதார குற்றத்தடுப்பு பிரிவு ஐஜி முருகன் ஆகியோர் திருநெல்வேலிக்கும் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம், பழனி பகுதிகளுக்கு ஜி.ஸ்டாலின், தேனி மாவட்டம், கம்பம், போடி பகுதிகளுக்கு பாஸ்கரன், தூத்துக்குடி மாவட்டம், காயல்பட்டினம் பகுதிகளுக்கு மகேந்திரன் ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களை ஒருங்கிணைத்து சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி ஜெயந்த் முரளி செயல்படுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments