கடல் வழியே கடத்த முயன்ற 14.35 கிலோ தங்கம் பறிமுதல்

0 1608

இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு கடத்த முயன்ற 14 புள்ளி 35 கிலோ தங்கத்தை, இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

யாழ்ப்பாணம் பகுதியை சேர்ந்த நகை வியாபாரி ஒருவர் திருட்டு நகைகளை வாங்கி, உருக்கி கட்டியாக்கி மாதகல் பகுதியை சேர்ந்த இருவர் வாயிலாக படகு மூலம் இந்தியாவிற்கு கடத்தியுள்ளார்.

அவர்கள் நெடுந்தீவு அருகே வந்தபோது அவ்வழியாக ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த, இலங்கை கடற்படையினர் படகை நிறுத்தி சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது சட்ட விரோதமாக கடத்தி வரப்பட்ட தங்கத்தை பறிமுதல் செய்த கடற்படையினர், கடத்தலில் ஈடுபட்ட இருவரையும் கைது செய்து யாழ்பானம் போலீசில் ஒப்படைத்தனர். கைப்பற்றப்பட்ட தங்கத்தின் எடை 14 கிலோ 350 கிராம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments