ரிசர்வ் வங்கியின் நிதியாண்டில் மாற்றம்?
ரிசர்வ் வங்கியின் நிதியாண்டை தற்போதுள்ள ஜூலை-ஜூன் என்பதிலிருந்து மாற்றம் செய்து அரசு கடைபிடித்து வரும், ஏப்ரல்-மார்ச் நிதியாண்டுடன் இணைக்க ரிசர்வ் வங்கி இயக்குநர் குழு பரிந்துரை செய்துள்ளது.
2020-21 நிதியாண்டுக்கான பட்ஜெட் நாடாளுமன்றத்தில் தாக்கலானதற்கு பிறகு, ரிசர்வ் வங்கி வாரியக் குழுவின் முதல் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில், ரிசர்வ் வங்கியின் நிதியாண்டை அரசு பின்பற்றி வரும் நிதியாண்டுடன் இணைக்க பரிந்துரைக்கப்பட்டது.
பட்ஜெட் திட்டங்களுக்கு சிறந்த மதிப்பீடுகளை வழங்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த திட்டத்தை, மத்திய அரசின் பரிசீலனைக்கு அனுப்பி வைக்க ரிசர்வ் வங்கி வாரியக் குழு ஒப்புதல் தெரிவித்துள்ளது.
Comments