இந்தியாவின் உள்விவகாரத்தில் வெளிநாடுகளுக்கு இடமில்லை-இந்தியா

0 1100

காஷ்மீர் விவகாரம் குறித்து கவலைப்படத் தேவையில்லை என்றும் இது உள்நாட்டு விவகாரம் என்றும் அமெரிக்காவுக்கு இந்தியா மீண்டும் நினைவுபடுத்தியுள்ளது.

இப்பிரச்சினையை இந்தியா தானாக தீர்த்துக் கொள்ளும் என்று வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். ஜெர்மனியின் முனிச் பாதுகாப்பு மாநாட்டில் அமெரிக்க குடியரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லிண்ட்சே கிரஹாம் (lindsey graham) என்பவர் காஷ்மீர் பிரச்சினையை எழுப்ப முயன்ற போது பதிலளித்த ஜெய்சங்கர் ஒரு ஜனநாயக நாடு இப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் என்றும் அந்த நாடு எது என்பது உங்களுக்கு நன்றாகவே தெரியும் என்றும் குறிப்பிட்டார்.

அதிபர் டிரம்ப் இந்தியா வர உள்ள நிலையில் காஷ்மீர் விவகாரத்தில் தனது நிலைப்பாட்டை இந்தியா மீண்டும் ஒருமுறை அமெரிக்காவுக்கு தெளிவுபடுத்தியுள்ளது. 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments