நடப்பாண்டு ஐபிஎல் தொடரை இந்த அணி தான் வெல்லும்- ஹர்பஜன் சிங் கணிப்பு

0 1213

இந்தாண்டிற்கான ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிச்சயம் கோப்பையை வெல்லும் என, சென்னை அணி வீரர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.

வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற கலை மற்றும் கலச்சார விழாவின் இறுதி நாளில் பங்கேற்ற ஹர்பஜன், கலை நிகழ்ச்சிகளை பார்த்து ரசித்ததோடு பல்வேறு போட்டிகளில் வென்றவர்களுக்கு பரிசுகளையும் வழங்கினார்.

பின்பு பேசிய அவர், ஐபிஎல் போட்டிகளில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி சிறப்பாக விளையாடுவார் என நம்புவதாக தெரிவித்தார். மேலும், மாணவர்கள் கடுமையாக உழைத்து கனவுகளையும் லட்சியங்களையும் அடைய வேண்டும் என்ற அவர், தலைகவசம் அணிந்து வாகனம் ஓட்டுங்கள், மது அருந்திவிட்டு வாகனத்தை ஓட்டாதீர்கள் என அறிவுரையும் வழங்கினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments