TNPSC தேர்வு முறைகளில் மேலும் 6 சீர்திருத்தங்கள்

0 1014

தேர்வு முறைகளில் மேலும் சில மாற்றங்களை செய்துள்ள டி.என்.பி.எஸ்.சி இனி வரும் காலங்களில் கொள்குறிவகை தேர்வுகளில் அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்க வேண்டியதை கட்டாயமாக்கியுள்ளது. விடை தெரியாத கேள்விகளுக்கு A, B, C, D அல்லாமல் விடைத்தாளில் கூடுதலாக கொடுக்கப்படும் E என்ற வட்டத்தை கருமையாக்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

குரூப் - 4, குரூப்-2ஏ தேர்வு முறைகேடுகளை அடுத்து தேர்வு முறைகளில் சில மாற்றங்களை செய்து கடந்த 7ம் தேதி டி.என்.பி.எஸ்.சி அறிவித்திருந்தது. இந்நிலையில் தொடர்ந்து 2வது முறையாக தேர்வு முறைகளில் சில சீர்திருத்தங்களை மேற்கொண்டுள்ள தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அதன் முக்கிய அம்சங்களை அறிவித்துள்ளது.

அதன்படி குரூப்-4 மற்றும் குரூப்-2ஏ தேர்வுகளுக்கு, இதுவரை பொது அறிவுத்தாள் கொண்ட ஒரே ஒரு தேர்வு மட்டுமே நடைபெற்று வந்த நிலையில், இனிவரும் காலங்களில் அது முதனிலை மற்றும் முதன்மை தேர்வு என இருநிலைகளாக நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போல் 10 மணிக்கு தேர்வு தொடங்கினாலும், தேர்வர்களின் மெய்த்தன்மையை உறுதி செய்யவும், விதிமுறைகளை விளக்க ஏதுவாகவும், 9 மணிக்கே தேர்வர்கள் தேர்வு கூடங்களுக்கு வரவேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இனிவரும் காலங்களில் கொள்குறிவகை தேர்வுகளில் அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்க வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. விடை தெரியவில்லை அல்லது விடையளிக்க இயலவில்லை எனில், கூடுதலாக கொடுக்கப்படும் E என்ற வட்டத்தை கருமையாக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தேர்வு மையங்களிலிருந்து விடைத்தாள்களை தேர்வாணைய அலுவலகத்திற்கு கொண்டு வர தற்போதுள்ள முறை முற்றிலும் மாற்றப்பட்டு, GPS மற்றும் கண்காணிப்பு கேமரா வசதியுடன் கூடிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments