இசைக் கச்சேரியால் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் திடீர் சோகம்

0 1384

தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாத் மாவட்டத்தில் உள்ள போதன் நகரில் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் இசைக்கச்சேரியால் மாப்பிள்ளை திடீர் மரணம் அடைந்தார்.

வரவேற்பு நிகழ்ச்சியில் இசைக்கச்சேரி நடைபெற்றுக் கொண்டிருந்த போது இரைச்சலால் மாப்பிள்ளை திடீரென மயங்கி விழுந்தார். உறவினர்கள் அவரை மருத்துவமனையில் அனுமதித்தபோது அவர் மாரடைப்பு ஏற்பட்டு இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதுதொடர்பாக பேசிய மாப்பிள்ளையின் பெற்றோர், திருமண வரவேற்பின்போது இசைக்கச்சேரி நடத்தப்பட்டதாகவும், அதிக சத்தத்துடன் இசைக்கருவிகள் இசைக்கப்பட்டதால், தங்களது மகன் உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments