மின்னல் வேக ஓட்ட இளைஞருக்கு பயிற்சி அளிக்க திட்டம் : கிரண் ரிஜிஜூ

0 2987

உசேன் போல்டை விட வேகமாக ஓடிய கர்நாடக இளைஞரின் வீடியோ வைரலான நிலையில், சர்வதேச போட்டிகளுக்கு தயார் படுத்தும் விதமாக அவருக்கு பயிற்சி அளிக்க திட்டமிட்டு இருப்பதாக மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துளளார்.

கர்நாடக மாநிலம் மங்களூரு அய்கலாவில் சமீபத்தில் கம்பளா போட்டி நடைபெற்றது. எருமை மாடுகளுடன் வீரர்கள் ஓடும் அந்த போட்டிக்காக சுமார் 142.5 மீட்டருக்கு தண்ணீர், சகதியுடன் தடம் அமைக்கப்பட்டிருந்தது. போட்டியில் கலந்து கொண்ட சீனிவாச கவுடா என்ற இளைஞர், பந்தய தூரத்தை வெறும் 13.62 நொடியில் கடந்தார்.

அதாவது 100 மீட்டர் தூரத்தை 9.55 விநாடிகளில் சீனிவாச கவுடா கடந்துள்ளார். உலகில் மிக வேகமாக ஓடும் மனிதராகக் கருதப்படும் உசேன் போல்ட் 9.58 விநாடிகளில் 100 மீட்டர் ஓட்ட போட்டியைக் கடந்ததே அதிகபட்ச சாதனையாக இருக்கிறது. அதனை முறியடிக்கும் விதமாக சீனிவாச கவுடாவின் மின்னல் வேக ஓட்டம் அமைந்து இருந்தது.

கட்டிடத் தொழிலாளியான 28 வயதான சீனவாச கவுடா கம்பளா போட்டியில் கலந்து கொண்ட வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலானது. பல்வேறு தரப்பினரும் அவருக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.imageஅவரது உடல்கட்டைப் பார்த்தாலே தடகளப் போட்டியில் பல சாதனைகள் படைக்கும் தகுதி இருக்கிறது என்பதை அறிய முடியும் என்று மஹிந்திரா நிறுவனத்தின் சிஇஓ ஆனந்த் மஹிந்திரா தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

மேலும், 100 மீட்டர் போட்டிகளில் பங்கேற்றும் விதமான சீனிவாச கவுடாவுக்கு பயிற்சி அளிக்க வேண்டும் அல்லது கம்பாலா போட்டியை ஒலிம்பிக்கில் சேர்க்க வேண்டும் என்று மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூவிற்கு கோரிக்கை விடுத்தார். அதற்குப் பதிலளித்த ரிஜிஜூ தான் சீனிவாச கவுடாவுக்கு பயிற்சி அளிக்க திட்டமிட்டுள்ளதாக ட்விட்டரில் பதிலளித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments