அந்த 10 முத்தங்கள்.. காதல் கிளிகள் டூயட்..!

0 2199

காதலிக்கும் ஜோடிகளை காதல் கிளிகள் என்று உவமை படுத்துவது வழக்கம், உண்மையிலேயே கொஞ்சிக்கொள்ளும் இரு கிளிகளின், அழகிய காதல் காட்சியின் நீட்சியாய் இந்த செய்தி தொகுப்பு..

காதல் ...! அத்துனை ஜீவராசிகளின் மனதிலும் உருகி ஓடும் ஓர் அற்புத உணர்வு... என்பதை இந்த காதல் கிளிகள் தங்களின் முத்த பறிமாற்றத்தால் சொல்லாமல் சொல்கின்றன.

காதல் என்றால் இடையூறு இல்லாமலா ? அமர்ந்திருக்கும் மூங்கில், காற்றில் அசைந்து காதலை ஆட்டம் கானவைத்தாலும் அதனை தாலாட்டாக எடுத்துக் கொண்டு மீண்டும் அழுத்தமாக முத்தமிடுகின்றன இந்த இளங்கிளிகள்.

புன்னகை மன்னன் கமல்ஹாசனுக்கு சற்றும் சளைத்ததல்ல இந்த ஆண் கிளி..! அங்கிருந்து பறந்து செல்லும் வரை பெண் கிளிக்கு கொடுத்தது மொத்தம் 10 உதட்டு முத்தங்கள்..!

நாட்டில் தான் காதலுக்கு எதிர்ப்பு... இந்த மூங்கில் காட்டில் அல்ல..! என்று மனதில் தோன்றினாலும் பெண் கிளி காதலிப்பது ஆண் கிளியை தானே.....! ஒரு வேளை ஆண் குயிலாக இருந்தால் காக்கா கூட்டம் போல கிளிக்கூட்டமும் குயிலை விரட்ட ஆரம்பித்திருக்குமோ..? என்னவோ ?

இந்த கிளி சொல்லும் சேதி ஒன்றுதான், வாழும் காலம் வரை அனைத்து உயிர்களிடமும் அன்பு கொண்டு இருப்போம்..! நம்புகிறவர்களுக்கு உண்மையாக இருப்போம்..! ஏனெனில் அன்பும் உண்மையும் கலந்தது தானே காதல்..!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments