வேகமாக பரவும் கொரோனா வைரஸ்..! மலைக்க வைக்கும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை

0 3775

உலகம் முழுவதும் கொரானா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 67 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

சீனாவின் உகானில் இருந்து 28 நாடுகளுக்கு கொரானா வைரஸ் பரவியுள்ளது. இதில் சீனாவில் 66 ஆயிரத்து 492 பேருக்கும், அதற்கடுத்து ஜப்பானில் 258 பேருக்கும் வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஜப்பானில் வைரஸ் உறுதியானோரில் 219 பேர், டைமன்ட் பிரின்சஸ் கப்பலில் இருப்போர் ஆவர்.

இதுதவிர தாய்லாந்தில் 34 பேருக்கும், மலேசியாவில் 21 பேருக்கும் வைரஸ் உறுதியாகியுள்ளது. ஆப்பிரிக்க கண்ட நாடுகளில் முதல் நாடாக எகிப்தில் ஒருவருக்கு வைரஸ் உறுதியாகியுள்ளது.

பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளிலும் பலருக்கு வைரஸ் உறுதியாகியுள்ளது. ஜப்பான் துறைமுக பகுதியில் 4ம் தேதி முதல் நிறுத்தப்பட்டுள்ள சொகுசு கப்பலில் இருப்போர் 21ம் தேதி முதல் வெளியேற்றப்படுவர் என கப்பல் நிர்வாகம் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments