டிரம்ப் வருகை: 3 மணி நேரத்துக்கு எவ்வளவு செலவு தெரியுமா..?

0 3156

குஜராத்தில் டிரம்ப் தங்கியிருக்கும் வெறும் 3 மணி நேரத்துக்காக அந்த மாநில அரசு 100 கோடி ரூபாய்க்கும் மேல் செலவு செய்து ஏற்பாடுகளை செய்து வருகிறது.

அகமதாபாத்துக்கு 24ம் தேதி வரும் டிரம்ப், அங்கு சுமார் 3 மணி நேரம் தங்கியிருக்கவுள்ளார். இதையொட்டி அகமதாபாத் நகராட்சியும், அகமதபாத் நகர்ப்புற மேம்பாட்டு ஆணையமும் 100 கோடி ரூபாய்க்கும் மேல் செலவு செய்து நகரை அழகுப்படுத்தியும், சாலைகளை சீரமைத்தும் வருகின்றன.

80 கோடி ரூபாயில் சாலை சீரமைப்பு மற்றும் புதிதாக சாலை அமைத்தல் பணியும், 12 கோடி முதல் 15 கோடி ரூபாயில் பாதுகாப்பு பணியும், 7 கோடி முதல் 10 கோடி ரூபாயில் விருந்தினர்களின் போக்குவரத்து, தங்குவதற்கான ஏற்பாடும், 6 கோடி ரூபாயில் சாலை நடுவே மரக்கன்றுகளை நடும் பணியும், 4 கோடி ரூபாயில் மோடி-டிரம்ப் பயணிக்கும் பாதையில் சிறப்பு நிகழ்ச்சிக்கான ஏற்பாடும் நடைபெறுகின்றன.

 

 

watch polimer news online : https://www.youtube.com/channel/UC8Z-VjXBtDJTvq6aqkIskPg

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments