அமைச்சர் என தெரியாமல் தடுத்து நிறுத்திய போலீஸ் மீது பாய்ந்த நடவடிக்கை

0 1232

பீகாரில், நிகழ்ச்சியொன்றில் கலந்துகொள்ள சென்ற அமைச்சரை, அங்கிருந்த போலீஸ்காரர் ஒருவர், அடையாளம் தெரியாமல் தடுத்து நிறுத்தியதால் அவரை சஸ்பெண்ட் செய்யுமாறு அமைச்சர் உத்தரவிட்டார்.

image

பீகார் மாநிலம் சிவானில், மருத்துவமனையொன்றின் அடிக்கல் நாட்டு விழாவுக்கு அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் மங்கள் பாண்டே சென்றார். அப்போது பாதுகாப்புப் பணியில் நின்று, ஒவ்வொருவராக உள்ளே அனுப்பிக்கொண்டிருந்த போலீஸ்காரர் ஒருவர், அமைச்சர் எனத் தெரியாமல் மங்கள் பாண்டேவை தடுத்து நிறுத்தியுள்ளார். இதனால் கோபமடைந்த மங்கள் பாண்டே , தான் ஓர் அமைச்சர் என்பதைக்கூட அறிந்துவைத்திராமல் தடுத்து நிறுத்திய போலீஸ்காரரை சஸ்பெண்ட் செய்யுமாறு காவல் உயரதிகாரிக்கு உத்தரவிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments