காதலித்து ஏமாற்றிய காதலன் வீட்டின் முன்பு இளம்பெண் பெற்றோருடன் தர்ணா

0 1485

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே காதலித்து திருமணம் செய்துகொள்ளாமல் ஏமாற்றியதாக கூறி காதலன் வீட்டின் முன்பு இளம்பெண் பெற்றோருடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

சோழகன்குடிக்காடு கிராமத்தைச் சேர்ந்த புகழ் என்ற இளைஞர், அதே ஊரைச் சேர்ந்த அருணா என்ற பெண்ணை காதலித்தார்.

இருவரும் கோவிலில் பெற்றோருக்கு தெரியாமல் மோதிரம் மாற்றிக் கொண்ட நிலையில், அதன் பின்னர் புகழ் வெளிநாட்டிற்கு வேலைக்குச் சென்றுள்ளார்.

image

இதற்கிடையே புகழின் சம்மதத்துடன் அவருக்கு வேறொரு பெண்ணுடன் பெற்றோர் திருமண ஏற்பாடு செய்ததாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் காதலன் வீட்டின் முன்பு அருணா தனது பெற்றோர் மற்றும் உறவினர்களுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

watch polimer news online : https://www.youtube.com/channel/UC8Z-VjXBtDJTvq6aqkIskPg

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments