ராஜஸ்தானை சேர்ந்த பெண் சாதனை!! ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி !!
இந்திய தடகள வீராங்கனை இந்த ஆண்டு நடக்கும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி அடைந்து உள்ளார்.
ராஜஸ்தானை சேர்ந்த 24 நான்கு வயதான பாவனா ஜாட், ராஞ்சியில் நடந்த ஏழாவது தேசிய ரேஸ் வாக் தடகள போட்டிகளில் பங்கேற்று 20 கிலோமீட்டர் பந்தய தூரத்தை 1 மணி நேரம் 29 நிமிடம் 50 நொடிகளில் கடந்து தேசிய சாதனை படைத்தார்.
அவர் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெரும் நேரமான 1 மணி 31 நிமிடத்திற்குள் இலக்கை எளிதாக கடந்ததன் மூலம் இந்த ஆண்டு ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார்.
இதே போட்டியில் பங்கேற்ற பிரியங்கா கோஸ்வாமி வெறும் 36 நொடிகள் தாமதமாக (1.31.36) கடந்து ஒலிம்பிக்கில் பங்குபெறும் வாய்ப்பை தவறவிட்டார்.
இதே போல ஆண்களுக்கு நடந்த ரேஸ் வாக் போட்டியில் பங்கு பெற்ற சந்தீப் குமார் தகுதி நேரமான 1 மணி 20 நிமிடத்தை 1 நிமிடம் 34 நொடி தாமதமாக கடந்து ஒலிம்பிக் வாய்ப்பை இழந்தார்.
இது குறித்து அவர் கூறுகையில் வரும் மார்ச் மாதம் நடைபெறும் ஆசிய ரேஸ் வாக் போட்டியில் வெற்றி பெற்று ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறுவேன் என் கூறினார்
Comments