டிரம்ப் வருகைக்கும் அகமதாபாத்தில் சுவர் கட்டப்படுவதற்கும் சம்பந்தமில்லை - அகமதாபாத் நகராட்சி

0 1715

குஜராத் மாநிலம், அகமதாபாத்துக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் வரும்போது, அங்குள்ள குடிசை பகுதியை மறைக்கும் வகையில் பிரமாண்ட சுவர் கட்டப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், அதை அகமதாபாத் நகராட்சி (Ahmedabad Municipal ) திட்டவட்டமாக மறுத்துள்ளது.

அகமதாபாத்தில் குடிசைகள் உள்ள பகுதியில் சாலையோரம் பிரமாண்ட சுவர் எழுப்பும் பணி தீவிரமாக நடைபெறுகிறது. டிரம்ப் 24ம் தேதி வருகைதரவுள்ள நிலையில், இப்பணி நடப்பதால் அவரது பார்வையில் இருந்து குடிசைகளை மறைக்க சுவர் எழுப்பப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதை மறுத்துள்ள அகமதாபாத் நகராட்சி ஆணையர் விஜய் நெஹ்ரா, சாலையில் ஆக்கிரமிப்பு நடைபெறுவதை தடுக்க சுவர் கட்டுவது என்று 2 மாதங்களுக்கு முன்பே முடிவு எடுக்கப்பட்டதாகவும், டிரம்ப் வருகைக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

 

watch polimer news online : https://www.youtube.com/channel/UC8Z-VjXBtDJTvq6aqkIskPg

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments