குறைவான சத்தம்.! காற்றை கிழிக்கும் வேகம்.. முழு வீச்சில் தயாராகும் நாசாவின் Supersonic X-59
நாசாவின் புதிய சோதனை (மாதிரி) விமானமான Supersonic X-plane தயாரிக்கும் பணி தீவிரமடைந்துள்ளது. இந்த சூப்பர்சோனிக் ஜெட் விமானம், நடப்பாண்டு இறுதிக்குள் முழுமையாக கட்டமைக்கப்பட்டு விடும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
கலிபோர்னியாவின் பாம்டேலில் உள்ள லாக்ஹீட் மார்ட்டின் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தின் ஸ்கங்க் ஒர்க்ஸ் தொழிற்சாலையில், 247.5 மில்லியன் டாலர் செலவில் X-59 கட்டமைக்கப்பட்டு வருகிறது.
ஒலியின் வேகத்தை விட..
2018-ம் ஆண்டில் X-59 QueSST என்று அதிகாரப்பூர்வமாக பெயரிடப்பட்ட இந்த விமானம், தற்போது X-59 என்றே குறிப்பிடப்பட்டு வருகிறது. இந்த ஜெட் விமானத்தை முழுமையாக உருவாக்கி வெற்றிகரமாக சீறிப்பாய வைப்பதன் மூலம், நிலத்தின் மீது ஒலியின் வேகத்தை விட அதிவேகமாக மற்றும் குறைந்த சத்தத்துடன் பறக்க கூடிய Supersonic விமானத்தை உருவாக்குவதை நோக்கமாக கொண்டுள்ளது நாசா. இந்த Supersonic X-plane-ஐ உருவாக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள விண்வெளி மற்றும் பாதுகாப்பு நிறுவனமான லாக்ஹீட் மார்ட்டின் (Lockheed Martin), விமானத்தை உருவாக்கும் பணியை இந்த ஆண்டு இறுதிக்குள் முழுமையாக முடிக்க திட்டமிட்டுள்ளது.
சப்தத்தை குறைக்கும் வகையில்..
வானில் பறக்கும் போது எழக்கூடிய சப்தத்தை குறைக்கும் வகையில் X-59 வடிவமைக்கப்பட்டு வருகிறது. இது குறித்து கூறியுள்ள அந்நிறுவனம், சில ஆதாரச் சோதனைகளைச் செய்ய ஏர்ஃப்ரேமை எடுத்து வேறு சில பாகங்கள் நிறுவப்படும். பின்னர் சில சோதனைகளுக்கு பிறகு இறுதி வடிவம் பெறும் என கூறப்பட்டுள்ளது.இந்த X-59 சூப்பர்சோனிக் வேகத்தில் செல்லும் வகையில் உருவாக்கப்பட்டாலும், மிகப்பெரிய சப்தம் எழாமல் காற்றில் சீறி பாயும் என்பதே சிறப்பம்சம் என நாசா கூறியுள்ளது.
சோதனை ஓட்டம்?
விமானத்தில் புரட்சியை ஏற்படுத்த, எக்ஸ் -59 விமானிகளுக்கு முன்னோக்கி எதிர்கொள்ளும் கேமரா மற்றும் காட்சி அமைப்பை நாசா உருவாகியுள்ளது. அதிர்வு சோதனை கணினியின் கட்டமைப்பு ஒருமைப்பாட்டை உறுதிப்படுத்தும் என்று நாசா நம்பிக்கை தெரிவித்துள்ளது. மேலும் X59 ஜெட் விமானத் திற்கான ஒரு புதுமையான காக்பிட் எக்ஸ்டெர்னல் விசிபிலிட்டி சிஸ்டம் உட்பட - விமானத்தின் அமைப்புகளின் இறுதி அசம்பிளி மற்றும் ஒருங்கிணைப்பு நடப்பாண்டின் பிற்பகுதியில் நிறைவு செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது. சோதனைகள் அனைத்தும் முடிந்த பின் சூப்பர்சோனிக் எக்ஸ்-59 விமானத்தின் முதல் சோதனை ஓட்டம் 2021-ன் துவக்கத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Lockheed Martin நிறுவன பிரிதிநிதி ஒருவர் அளித்துள்ள தகவலின்படி, முதற்கட்டம் விமானத்தை உருவாக்குவது, இரண்டாம் கட்டத்தில் ஒலி சரி பார்ப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். மூன்றாம் கட்டமாக low boom சோதனை நடத்தப்படும். அதாவது Supersonic X59 பறந்தால் மக்களால் அந்த சப்தத்தை கேட்க முடிகிறதா என்று சோதிக்கப்படும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
watch polimer news online : https://www.youtube.com/channel/UC8Z-VjXBtDJTvq6aqkIskPg
Comments