காவிரி டெல்டா குறித்து மத்திய அரசிடம் கொடுத்த முதலமைச்சரின் கடித விவரங்கள் வெளியீடு

0 1022

காவிரி டெல்டா பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அது தொடர்பாக அமைச்சர் ஜெயக்குமார் தலைமையிலான குழு மத்திய அரசிடம் கொடுத்த முதலமைச்சரின் கடித விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

நேற்று செய்தியாளர்களிடம் பேசிய தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், முதலமைச்சரின் கடிதம் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளதன் மர்மம் என்ன? அந்த கடிதத்தை தமிழக அரசு வெளியிடத் தவறினால், விரைவில் தானே வெளியிடப் போவதாகத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் அந்தக் கடிதத்தை அமைச்சர் ஜெயக்குமார் வெளியிட்டுள்ளார். ஹைட்ரோகார்பன் மீத்தேன் உள்ளிட்ட திட்டங்களால் தமிழகத்தின் நெற்களஞ்சியமான காவிரி டெல்டாவில் நிலத்தடி நன்னீர் வளம் சீர்குலைவு, கடல் நீர் உட்புகுதல், சுற்றுச்சூழல் மாசுபாடு உள்ளிட்ட அபாயங்கள் கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ள காவிரி டெல்டாவில் மத்திய அரசு இத்தகைய திட்டப் பணிகளை நிறுத்தவும், அவற்றுக்கு விலக்களித்து அறிவிக்கை வெளியிடவும்  வலியுறுத்தப்பட்டுள்ளது. 

 

watch polimer news online : https://www.youtube.com/channel/UC8Z-VjXBtDJTvq6aqkIskPg

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments