பாதுகாப்பு கருவிகளுக்காக கெஞ்சும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ள சீனா
சீனாவில் கொரானா வைரஸ் தொற்றுக்கு எதிராக போராடி வரும் மருத்துவர்களும் மருத்துவப் பணியாளர்களும், போதிய சப்ளை இல்லாததால் உரிய பாதுகாப்பு கருவிகளுக்காக கெஞ்சும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
ஒட்டுப் போட்ட முகமூடிகள், ஒருமுறை மட்டுமே பயன்படுத்த வேண்டிய காப்புக் கண்ணாடிகளை திரும்பத் திரும்ப பயன்படுத்துவது, காலணிகள், கையுறைகளை பிளாஸ்டிக்குகளை சுற்றி பாதுகாத்துக் கொள்வது என மருத்துவ ஊழியர்களின் நிலை பரிதாபமாக உள்ளது.
வூகான் உள்ளிட்ட நகரங்களுக்கு சீல், போக்குவரத்து முடக்கம் போன்றவை உரிய மருத்துவக் கருவிகளை சப்ளையையும் பாதித்துள்ளது. வைரஸிலிருந்து தற்காத்துக் கொள்வதற்கான இந்த மருத்துவக் கருவிகள் போதுமான அளவு இல்லாத நிலையில், மருத்துவப் பணியாளர்கள் கொரானா தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர்.
இதுவரை 1700-க்கும் மேற்பட்ட மருத்துவப் பணியாளர்கள் கொரானா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 6 பேர் உயிரிழந்திருப்பதாகவும் சீன அரசு முதன்முறையாக ஒப்புக்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
watch polimer news online : https://www.youtube.com/channel/UC8Z-VjXBtDJTvq6aqkIskPg
Comments