சீன நிறுவனங்களுக்கு ஆதரவு கரம் நீட்டும் அரசு

0 1154

சீன நிறுவனங்கள் கூடிய விரைவில் உற்பத்தியை தொடங்க தேவையான ஆதரவு அளிக்கப்படும் என அந்நாட்டு அரசு கூறியுள்ளது.

உலகின் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதாரமான சீனா, கொரானா வைரஸ் பாதிப்பால், தொழில், உற்பத்தி, வர்த்தகம் முடங்கி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. சிறு நிறுவனங்களும், தனியார் நிறுவனங்களும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், முக்கிய முதலீட்டு திட்டங்களுக்கு நிதியுதவி, கடனுதவி வழங்குவது விரைவுபடுத்தப்படும் என்று சீன வங்கிகள் மற்றும் காப்பீட்டு துறை ஒழுங்குமுறை ஆணைய துணைத் தலைவர் லியாங் தாவோ தெரிவித்துள்ளார்.

இதேபோல சிறு நிறுவனங்களுக்கும், தனியார் நிறுவனங்களுக்கும் உரிய ஆதரவு அளிக்கப்படும் என அவர் கூறியுள்ளார். இதேபோல, சர்வதேச பரிவர்த்தனைகளுக்கு சிக்கல் நேராத வகையில், அன்னிய செலாவணி கையிருப்பு பராமரிக்கப்படும் என அதற்கான சீன ஒழுங்குமுறை ஆணையமும் தெரிவித்துள்ளது

 

watch polimer news online :https://www.youtube.com/channel/UC8Z-VjXBtDJTvq6aqkIskPg

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments