டைமண்ட் பிரின்சஸ் கப்பலில் உள்ள அமெரிக்கர்களை மீட்க அரசு முடிவு

0 898

ஜப்பானில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள டைமண்ட் பிரின்சஸ் கப்பலில் உள்ள அமெரிக்கர்களை மீட்க அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது.

அக்கப்பலில் கொரானாவால் முதியவர் ஒருவர் பலியானதை அடுத்து யோகோஹாமா பகுதியில் கடந்த 3ம் தேதி முதல் தனிமைப்படுத்தி நிறுத்தப்பட்டுள்ளது. 3500 பயணிகளுடன் ஹாங்காங் சென்று திரும்பிய கப்பலில் இதுவரை 218 பேருக்கு கொரானா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவர்கள் கப்பலில் இருந்து வெளியேற்றப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் கப்பலில் உள்ள  அமெரிக்கர்கள் 380 பேரை மீட்க திட்டமிட்டுள்ள அந்நாட்டு வெளியுறவுத்துறை 2 மீட்பு விமானங்களை அனுப்ப உள்ளது. அவர்கள் அனைவரும் ஞாயிற்றுக்கிழமை அமெரிக்கா வந்தடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments