CAA-விற்கு எதிராக சென்னையில் போராட்டம்... தமிழகத்தின் பல்வேறு இடங்களில் தர்ணா, சாலை மறியல்

0 2039

குடியுரிமை சட்ட திருத்தத்தை எதிர்த்தும், ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது நடத்தப்பட்ட தடியடியை கண்டித்தும், சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் 2ஆவது நாளாக போராட்டம் நீடிக்கிறது.

குடியுரிமை சட்ட திருத்தம், தேசிய மக்கள் தொகை பதிவேடு, தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகிய மூன்றுக்கும் எதிர்ப்புத் தெரிவித்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த மூன்றுக்கும் எதிராக தமிழக அரசு, சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் ஜமாத் கூட்டமைப்பு சார்பில் நேற்று போராட்டம் நடைபெற்றது. மாலையில் போராட்டக்காரர்களை கலைந்து செல்லுமாறு போலீசார் கூறியபோது, வாக்குவாதம் தள்ளுமுள்ளு ஏற்பட்டு தடியடியில் முடிவடைந்தது.

நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் போராட்டத்தில் ஈடுபட்ட இஸ்லாமிய அமைப்பினருடன், வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். கைது செய்யப்பட்டவர்கள் விடுவிக்கப்படுவார்கள் என்று கூறிய அவர், யாரும் போராட்டங்களில் ஈடுபட வேண்டாம் என கேட்டுக் கொண்டார்.

பேச்சுவார்த்தையில் சுமுக உடன்பாடு எட்டப்பட்டதை அடுத்து கைதானவர்கள் விடுவிக்கப்பட்டனர். இதனை அடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட ஒரு தரப்பினர் கலைந்து சென்றனர். இருப்பினும், வேறு சிலர் தொடர்ந்து தங்கள் கோரிக்கைகளை ன் வைத்து போராட்டத்தை தொடர்கின்றனர். இதனிடையே, மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன், பிற்பகலில் போராட்டக்காரர்களை சந்தித்துப் பேச உள்ளதாகக் கூறப்படுகிறது.

இதனிடையே, சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்துப் பேசினார். சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள முகாம் அலுவலகத்தில், சுமார் அரைமணி நேரம் இந்த சந்திப்பு  நடைப்பெற்றது. சென்னை வண்ணாரப்பேட்டை போராட்டம் குறித்து முதலமைச்சரிடம் காவல் ஆணையர் விளக்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொடர்ந்து, வண்ணாரப்பேட்டையில் நேற்று போராட்டக்கார்களால் காயமடைந்தாக கூறி அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் காவலர்களை சந்தித்து ஏ.கே.விஸ்வநாதன் நலம் விசாரித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த சூழலில் அனைவரும் அமைதி காப்பது அவசியம் என்றார். சமூக வலைத்தளங்களில் தவறான பதிவுகளையும், மோதலை தூண்டுதல் கருத்துகளையும் பகிர வேண்டாம் என காவல் ஆணையர் குறிப்பிட்டார். தமிழகம் சட்டம்-ஒழுங்கை கடைபிடிக்கும் அமைதியான மாநிலம், அந்த பாரம்பரியத்தை அனைவரும் காக்க வேண்டும் என ஏ.கே.விஸ்வநாதன் கேட்டுக்கொண்டார். சென்னையில் எந்த போராட்டங்களுக்கும் அனுமதி கொடுக்கப்படவில்லை என்றும் அவர் விளக்கம் அளித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments