கருவிலுள்ள குழந்தைகளுக்கு கருணை காட்டும் கொரோனா..?

0 2982

கொரோனாவின் கொடூர பார்வையில் இருந்து தப்பிக்க முடியாமல் தொடர்ந்து சின்னாபின்னமாகி வரும் சீனாவில், இதுவரை 1500-க்கும் மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளனர். இந்நிலையில் கொரோனா (COVID-19) வைரஸ் குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிகளுக்கு குறைந்த அளவு பாதிப்புகளை ஏற்படுத்த கூடும் என்று கண்டறியப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் மிக எளிதில் பரவ கூடியதாக உள்ளது. அந்த வைரஸ் பாதிக்கப்பட்ட நபரால் மேலும் இருவருக்கு அதிவேகமாக கொரோனா பரவுகிறது. ஆனாலும் இதுவரை இந்த கொடிய வைரஸ்க்கு குறைவான எண்ணிக்கையிலான குழந்தைகளே பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின.

கர்ப்பிணிகளை வைத்து ஆய்வு:

இந்நிலையில் கொரோனாவின் அறிகுறியான சுவாச பிரச்சனை (நிமோனியா) கர்ப்பிணி பெண்கள் மற்றும் குழந்தைகளை எவ்வாறு பாதிக்கிறது என்று சமீபத்தில் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. COVID-19 பாதிப்பால் நிமோனியா இருப்பது கண்டறியப்பட்ட, 26 முதல் 40 வயதுக்குட்பட்ட கர்ப்பிணிப் பெண்கள் சிலர் ஆய்வுக்குட்படுத்தபட்டனர். சீனாவின் ஊகான் நகரில் இந்த புதிய ஆராய்ச்சி நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

image

கருவை தாக்காத கொரோனா.!

பரிசோதிக்கப்பட்ட பெண்கள் அனைவரும் தங்களது கர்ப்ப காலத்தின் ஒன்பதாவது மாதங்களில் இருந்தனர். இவர்கள் அனைவருக்கும் சிசேரியன் மூலம் வெற்றிகரமாக குழந்தை பிறந்தது. இந்த ஆய்வில் மிகவும் குறிப்பிடத்தக்க கண்டுபிடிப்பு என்னவென்றால், COVID-19 வைரசால் கருவிலுள்ள குழந்தைகளுக்கு எவ்வித பாதிப்புகளும் ஏற்படவில்லை என்பதே. இந்த ஆய்வு முடிவுகள் புதிதாக குழந்தையை பெற்றடுத்த தாய் ஒருவருக்கு, குழந்தை பிறந்து 36 மணி நேரங்களுக்கு பிறகு செய்யப்பட்ட சோதனையில் கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்ட பிறகு வெளியானது.

image

பிரிக்க வேண்டிய கட்டாயம்..

எனினும் பிறந்த குழந்தைக்கு தாயிடமிருந்து கொரோனா தொற்றிவிட கூடாது என்பதற்காக, தாயையும் குழந்தையையும் தனிமைப்படுத்தி வைத்தனர். நெருங்கிய தொடர்பு மூலம் ஏற்படும் பாதிப்புகளை தவிர்க்கவே வேறு வழியின்றி இவ்வாறு பிறந்த குழந்தைகளை, தாயிடமிருந்து பிரித்து வைக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

image

தெளிவான முடிவா.!

மேற்கண்ட ஆய்வு 9 மாத கர்ப்ப காலத்தில் உள்ள பெண்களிடம் செய்யப்பட்டது. ஆனால் 3 அல்லது 6 மாத கர்ப்பமாக உள்ள தாய்மார்களுக்கு கொரோனா தொற்று இருந்தால், அது அவர்களின் கருவில் உள்ள குழந்தைகளுக்கு பரவுமா என்பது குறித்து தெளிவாக சொல்ல முடியவில்லை என கூறப்பட்டுள்ளது.

இந்த கேள்விக்கான விடை வைரஸ் எவ்வாறு பரவுகிறது என்பதைப் பொறுத்தது. 3 அல்லது 6 மாத கர்ப்பிணிகளுக்கு கொரோனா தும்மல் மூலமாக பரவினால், சிசேரியன் மற்றும் சுகப்பிரசவம் இரண்டிலுமே ஆபத்து ஒரே மாதிரியாக இருக்கும்.

இன்னும் ஆய்வுகள் தேவை..

மாறாக இந்த வைரஸ் ரத்தம் அல்லது எச்.ஐ.வி போன்ற உடல் திரவங்கள் மூலம் பரவியிருந்தால், சிசேரியனில் கொரோனா பரவும் வீச்சு குறையும் என கூறியுள்ளனர் ஆய்வாளர்கள். தாங்கள் செய்துள்ள ஆராய்ச்சி முடிவுகள் நம்பிக்கைக்குரியவை தான். ஆனாலும் இந்த ஆய்வு சிறிய அளவிலானது. கருவில் உள்ள குழந்தையை கொரோனா தாக்குமா, தாக்காதா என்பதை மிக உறுதியாக சொல்ல இன்னும் அதிக ஆராய்ச்சி செய்வது அவசியம் என்று சுட்டிக்காட்டியுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments