8 மருத்துவகல்லூரிகளுக்கு மார்ச் மாதம் அடிக்கல் நாட்டுகிறார் முதலமைச்சர்

0 2149

தமிழகத்தில் புதிதாக அமைய உள்ள 8 மருத்துவக் கல்லூரிகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடுத்த மாதத்தில் அடிக்கல் நாட்ட உள்ளார்.

தமிழகத்தில் புதிதாக 9 மருத்துவக் கல்லூரிகள் அமைக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதில் 8 மருத்துவக் கல்லூரிகளுக்கு மார்ச் மாதத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்ட உள்ளார்.

மார்ச் 1ஆம் தேதி காலை 10 மணிக்கு ராமநாதபுரத்திலும், பிற்பகல் 3 மணிக்கு விருதுநகரிலும் மருத்துவக் கல்லூரிகளுக்கு அடிக்கல் நாட்டப்படுகிறது. மார்ச் 4ஆம் தேதி காலை 10.30 மணிக்கு கிருஷ்ணகிரியில் மருத்துவக் கல்லூரிகளுக்கு அடிக்கல் நாட்டப்படுகிறது.

மார்ச் 5ஆம் தேதி காலை 10.30 மணிக்கு நாமக்கல்லிலும், மாலை 4 மணிக்கு திண்டுக்கல்லிலும் மருத்துவக் கல்லூரிகளுக்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டுகிறார். மார்ச் 7ஆம் தேதி காலை 11 மணிக்கு நாகையிலும் மார்ச் 8ஆம் தேதி காலை 10 மணிக்கு திருவள்ளூரிலும், மார்ச் 14ஆம் தேதி காலை 10.30 மணிக்கு திருப்பூரிலும் மருத்துவக் கல்லூரிக்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்ட உள்ளார்.

நிகழ்ச்சிகளுக்கான நேரத்தை தெரிவிக்கும் வகையிலும், அடிக்கல் தயாரிப்பு உள்ளிட்ட பணிகளுக்காக விவரங்களைப் பெறும் வகையிலும், மத்திய சுகாதாரத்துறைக்கு, தமிழக சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் எழுதியுள்ள கடிதத்தில் இந்த விவரங்கள் இடம்பெற்றுள்ளன.

 

watch more on : https://www.youtube.com/channel/UC8Z-VjXBtDJTvq6aqkIskPg

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments