உசைன் போல்ட்டை விட வேகமாக ஓடிய கர்நாடக இளைஞர்
தடகள தங்கமகன், உலகின் அதிவேக மனிதர், மின்னல் வீரர் என்றெல்லாம் போற்றப்படுபவர் ஜமைக்கா நாட்டைச் சேர்ந்த உசேன் போல்ட். ஒலிம்பிக் பதக்கங்களை 8 முறை வென்றவர், உலக சாம்பியன் பட்டத்தை 11 முறை கைப்பற்றியவர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர் அவர்.
2009ம் ஆண்டு பெர்லினில் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் போட்டியில் 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் 9.58 வினாடிகளில் கடந்ததே உலக சாதனையாக போற்றப்பட்டு வருகிறது.
இதைவிட விரைவாக இந்தியாவைச் சேர்ந்த ஒருவர் வேறொரு சந்தர்ப்பத்தில் ஓடியிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. கர்நாடகாவில் நடைபெறும் பாரம்பரிய எருது ஓட்டம் கம்பாலா என்றழைக்கப்படுகிறது.
இதில் பந்தய தூரமான 142.5 மீட்டரை 13 புள்ளி 62 வினாடிகளில் கடந்துள்ளார் ஸ்ரீனிவாசா கவுடா என்ற இளைஞர். இதில் 100 மீட்டரை 9.55 வினாடிகளில் கடந்ததுதான் ஹைலைட். அதாவது உசேன் போல்ட்டின் சாதனையைவிட குறைந்த நேரத்தில் கடந்துள்ளார் ஸ்ரீனிவாச கவுடா. சமூக வலைதளங்களில் இந்த கம்பாலா ஓட்டம் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது.
Comments