கீழடி அகழாய்வு : 19ந் தேதி தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர்

0 1168

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள கீழடி பகுதியில் 6ஆம் கட்ட ஆய்வு பணிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி மூலம் வருகிற 19ந் தேதி தொடங்கி வைக்க இருப்பதாக தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராஜன் கூறியுள்ளார்.

கீழடியில் தொல்லியல் துறையினர் நடத்திய 5கட்ட அகழாய்வு பணியில்  அணிகலன்கள், பானை ஓடுகள், சுடுமண் சிற்பம், இரும்பு-செப்பு பொருட்கள் என 1000-க்கும் மேற்பட்ட பொருட்கள் கிடைத்தன.

அதே போல் பழந்தமிழர் வாழ்வியலை அறியும் வகையில் இரட்டை வட்டச்சுவர், தண்ணீர் தொட்டி, உறைகிணறு, கால்வாய் போன்றவையும் கண்டறியப்பட்டுள்ளன.

 

watch polimer news online : https://www.youtube.com/channel/UC8Z-VjXBtDJTvq6aqkIskPg

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments