இலங்கை ராணுவத் தளபதி சில்வா அமெரிக்காவில் நுழையத் தடை

0 884

இலங்கையின் ராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சாவேந்திரா சில்வா அமெரிக்காவிற்கு வர தடைவிதிக்கப்பட்டுள்ளது.

2009ம் ஆண்டு உள்நாட்டு யுத்தத்தில் ஆயிரக்கணக்கான தமிழர்களை கொன்று குவித்து, மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இது குறித்து அறிக்கை மூலமாக விளக்கிய அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் போம்பியோ ஐ.நா.சபை உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளால் இலங்கையின் ராணுவத் தளபதி மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் மிகவும் தீவிரமானவை, உண்மையானவை என்று தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து சில்வாவும் அவர் குடும்பத்தினரும் அமெரிக்காவுக்குள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் சில்வாவுக்கு ராணுவத்தில் உயர் பொறுப்பை அளித்த இலங்கை அரசுக்கு கடும் கண்டனங்களும் விமர்சனங்களும் எழுந்தன. அமெரிக்காவும் ஐநா.சபையும் அமைதிக்கான படைப்பிரிவிலிருந்து இலங்கையை நீக்கி விட்டன.

 

watch polimer news online : https://www.youtube.com/channel/UC8Z-VjXBtDJTvq6aqkIskPg

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments