வாரணாசியில் 30க்கும் மேற்பட்ட நலத்திட்டங்களை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி
பிரதமர் மோடி தமது மக்களவைத் தொகுதியான வாரணாசியில் நாளை ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புடைய 30 புதிய திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.
இத்திட்டத்தில் நாட்டின் முதல் தனியார் ரயில் வாரணாசியை மத்தியப் பிரதேசம் மாநிலம் உஜ்ஜைன், ஓம்காரேஷ்வர் ஜோதிர்லிங்க புனிதத்தலங்களுடன் இணைக்க உள்ளது. 430 படுக்கைகள் கொண்ட பன்னோக்கு சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையையும், 74 படுக்கைகளைக் கொண்ட இன்னொரு மருத்துவமனையையும் பனாரஸ் இந்து பல்கலைக்கழக அரசு மருத்துவமனை வளாகத்தில் பிரதமர் தொடங்கி வைக்க உள்ளார்.
மகா காளி எக்ஸ்பிரஸ் ரயிலையும் பிரதமர் மோடி காணொலி மூலம் தொடங்கி வைப்பார். பண்டிட் தீனதயாள் உபாத்தியாயாவின் நினைவிடத்தையும் நாட்டுக்கு அர்ப்பணிக்க உள்ள மோடி அங்கு ஆர்.எஸ்.எஸ். சிந்தனையை வகுத்த தலைவருக்கு 63 அடி திருவுருவச் சிலையை திறந்து வைக்க உள்ளார்.
கடந்த ஓராண்டுக்கும் மேலாக 200க்கும் மேற்பட்ட சிற்பக் கலைஞர்கள் இச்சிலையை வடிவமைக்க இரவு பகலாக உழைத்துள்ளனர். பொதுக்கூட்டம் ஒன்றிலும் உரை நிகழ்த்த உள்ள பிரதமர் மோடி பல்வேறு அரசு விழாக்களிலும் பங்கேற்க உள்ளார்.
watch polimer news online : https://www.youtube.com/channel/UC8Z-VjXBtDJTvq6aqkIskPg
Comments