மாநிலங்களவை எம்பிக்கள் 51 பேரின் பதவிக்காலம் ஏப்ரலில் நிறைவு
மாநிலங்களவை எம்பிக்கள் 51 பேரின் பதவிக்காலம் வரும் ஏப்ரல் மாதத்தில் நிறைவடைய உள்ளது.
காலியிடங்களில் பெரும்பாலானவற்றை பாஜகவும் காங்கிரசும் கைப்பற்ற இருப்பதால் இவ்விரு கட்சிகளுக்கும் மாநிலங்களவையில் பலம் கூடும். திரிணாமுல் காங்கிரஸ், ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் போன்ற கட்சிகளும் மாநில செல்வாக்கு காரணமாக இந்த முறை மாநிலங்களவையில் பிரதிநிதித்துவம் பெற வாய்ப்புள்ளது.
பாஜகவுக்கு தற்போது மாநிலங்களவையில் 82 எம்பிக்கள் உள்ளனர். அக்கட்சிக்கு மேலும் 13 புதிய எம்பிக்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. காங்கிரசுக்கு மாநிலங்களவையில் 46 எம்பிக்கள் இருக்கும் நிலையில் 11 எம்பிக்கள் பதவிக்காலம் நிறைவடைகிறது.ஆயினும் மாநிலங்களவையில் புதிய உறுப்பினர்கள் நியமனத்தால், அதன் எண்ணிக்கை 10 அதிகரிக்க கூடும்.
watch polimer news online : https://www.youtube.com/channel/UC8Z-VjXBtDJTvq6aqkIskPg
Comments