தேர்வு கண்காணிப்பாளர் தவறால் பதவியை இழந்தவருக்காக முடிவெடுக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் பரிந்துரை
தேர்வுக் கண்காணிப்பாளர் தவறால் துணை ஆட்சியர் பதவியை இழந்தவருக்காக தனி பதவியை உருவாக்கி பணி நியமனம் வழங்குவது குறித்து முடிவெடுக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது.
2017-ஆம் ஆண்டில் பாபு பிரசாந்த் என்பவர் துணை ஆட்சியர் பதவிக்கான குரூப் 1 தேர்வில் தவறுதல்கள் நேர்ந்த விடைகளை அடித்தார். அந்தப் பக்கங்களில் தேர்வுக்கூட கண்காணிப்பாளரின் நிர்ப்பந்ததத்தின் பேரில் விதிகளுக்கு மாறாக கையெழுத்திட்ட அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
அதற்கு எதிரான அவரது வழக்கை விசாரித்த நீதிபதி, நல்ல மதிப்பெண்கள் பெற்றுள்ள பாபு பிரசாந்த்தின் விடைத்தாளை மதிப்பிட்டு, நேர்முகத் தேர்வு நடத்தவும், தகுதி பெற்றால் அவருக்காக புதிய பதவியை உருவாக்கி பணி வழங்குவது குறித்து முடிவெடுக்கவும் தமிழக அரசுக்கு பரிந்துரைத்தார்.
இந்த உத்தரவு வேறு எந்த வழக்குகளுக்கும் பொருந்தாது என்றும் நீதிபதி தெரிவித்தார்.
watch polimer news online : https://www.youtube.com/channel/UC8Z-VjXBtDJTvq6aqkIskPg
Comments