பறவைகள், அணில்களின் பசியைப்போக்க மாணவர்களின் புதிய முயற்சி

0 1086

கர்நாடகா மாநிலத்தில் உள்ள அரசுப்பள்ளியில் பறவைகள் மற்றும் அணில்களின் பசி, தாகத்தை தீர்க்க மாணவர்கள் கையாண்டுள்ள புதிய முயற்சி பலரின் பாராட்டை பெற்று வருகிறது.

தட்சிணா கன்னடம் மாவட்டம் பலேபுனி என்ற இடத்தில் ஜவஹர் நவோதயா வித்யாலயா முடிபு (Jawahar Navodaya Vidyalaya Mudipu)பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் தேங்காய் சிரட்டைகளை சேகரித்த மாணவர்கள் அதில் தண்ணீர் மற்றும் உணவு தானியங்களை நிரம்பி, அங்குள்ள மரங்களில் கயிறுகள் மூலமாக கட்டி தொங்க விட்டுள்ளனர்.

பறவைகளின் பசி, தாகத்தை தணிக்க மாணவர்கள் விளையாட்டாக செய்த இந்த செயலால், அதிகமான பறவைகள் பள்ளி வளாகத்திற்குள் வருவதாக கூறும் பள்ளி முதல்வர், இந்த திட்டத்தில் மாணவர்கள் அதீத அக்கறை செலுத்தி வருவதாகவும் கூறுகிறார்.

 

watch polimer news online : https://www.youtube.com/channel/UC8Z-VjXBtDJTvq6aqkIskPg

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments