வினய் சர்மாவின் மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்
மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்கக் கோரி, நிர்பயா வழக்கு குற்றவாளிகளில் ஒருவனான வினய் சர்மா குடியரசுத் தலைவருக்கு அனுப்பிய கருணை மனு நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து தாக்கலான மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது.
கருணை மனுவை பரிசீலித்த போது, குற்றவாளியின் மருத்துவ நிலை அறிக்கை மற்றும் குற்றச்செயலில் வினய் சர்மாவின் பங்கு ஆகியவை கவனத்தில் கொள்ளப்படவில்லை என கூறிய வினய் சர்மா தரப்பு, கருணை மனுவை நிராகரிப்பது தொடர்பான பரிந்துரையில் ஆளுநர் மற்றும் உள்துறை அமைச்சர் கையெழுத்திடவில்லை என்றும் வாதிட்டது.
இதுதொடர்பான ஆவணங்களை ஆய்வு செய்த நீதிபதிகள், கருணை மனு நிராகரிப்பு தொடர்பான பரிந்துரையில் ஆளுநரும், உள்துறை அமைச்சரும் கையெழுத்திட்டிருப்பதாக கூறி மனு மீதான தீர்ப்பை ஒத்திவைத்தனர்.
வழக்கு வெள்ளி அன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது உடல் மற்றும் மனதளவில் குற்றவாளி வினய் சர்மா நலமுடன் இருப்பதாக கூறி மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது.
Comments