டர்பன் அணியலாம்..தாடி வளர்க்கலாம்..விமானப்படை உடையை புதுப்பித்த அமெரிக்க ராணுவம் !!

0 2019

அமெரிக்க விமானப்படை அணியும் உடையில் தங்களது மத நம்பிக்கைக்கு ஏற்ப டர்பன், ஹிஜாப் போன்றவை அணியலாம் என அமெரிக்கா விமானப்படை   அறிவித்துள்ளது.

அமெரிக்க ராணுவத்தின் ஒரு அங்கமான விமானப்படை அந்நாட்டு ராணுவத்தில் ஒரு முக்கிய அங்கமாக உள்ளது, பல்வேறு தாக்குதல்களில் அமெரிக்க விமானப்படை முக்கிய பங்காற்றியுள்ளது.

இதுவரை  விமானப்படை வீரர்கள் அணியும் உடையில் பல்வேறு கட்டுப்பாடுகளை அமெரிக்கா விதித்து இருந்தது இந்நிலையில், அமெரிக்க விமானப்படையில்  பணியாற்றும் மற்ற மதத்தினர் தங்களது மத நம்பிக்கைக்கு ஏற்ப உடையணியலாம் என அறிவித்து உள்ளது

image

இதன் படி அந்நாட்டு விமானப்படையில் பணியாற்றும் சீக்கியர்கள் டர்பன் அணியவும், தாடி வளர்த்து கொள்ளவும், தங்கள் முடியை வெட்டாமல் கொண்டை அணிந்து கொள்ளவும், இஸ்லாமிய பெண்கள் ஹிஜாப் எனும் முக ஆடையை அணியவும் அமெரிக்க விமானப்படை ஒப்புதல் அளித்துள்ளது.மேலும் தாங்கள் பிரார்த்தனைகள் செய்ய தங்குமிடங்களும் அமைக்கப்படும் எனவும் இந்த திட்டம் விரைவில் முழுவதுமாக அமல்படுத்தப்படும் எனவும் தெரிவித்து உள்ளது. இது குறித்து அமெரிக்க இஸ்லாமிய கவுன்சிலின் செய்திதொடர்பாளர் இப்ராஹிம் ஹூப்பர் கூறுகையில் "தங்கள் இந்த அறிவிப்பை வரவேற்பதாகவும் அனைத்து மதத்தவரும் ராணுவத்தில் சேருவதற்கும் இது ஊக்கமளிக்கும்" எனவும் தெரிவித்தார், மேலும் இந்த அறிவிப்பு  மூலம் அமெரிக்காவில் வசிக்கும் அனைத்து  சீக்கியர்களும் ராணுவத்தில் உள்ள எல்லா பிரிவுகளிலும் பணியாற்ற இது ஒரு ஊக்கமாக இருக்கும் எனவும் அமெரிக்க சீக்கிய கூட்டமைப்பின் வழக்கறிஞர் கிசெல்லி கிளேப்பேர் தெரிவித்தார். இதற்கு முன் விமானப்படை வீரரான குர்சேதன் சிங், கடந்த ஆண்டு ஹாபீந்தர் சிங் ஆகியோருக்கு டர்பன் அணியலாம் என் அனுமதியளித் நிலையில் மொத்தமாக அனைவருக்கும்  இதை நடைமுறைப்படுத்துவது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments