பதவியேற்பு விழாவில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு அரவிந்த் கெஜ்ரிவால் அழைப்பு

0 1368

டெல்லி முதலமைச்சராக தான் பதவியேற்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு, அரவிந்த் கெஜ்ரிவால் அழைப்பு விடுத்துள்ளார்.

டெல்லி சட்டமன்ற தேர்தலில் மொத்தமுள்ள 70 இடங்களில் 8 இடங்களை மட்டுமே பாஜகவிடம் இழந்த ஆம் ஆத்மி கட்சி, 62 இடங்களை கைப்பற்றிது. இந்த அபார வெற்றியை தொடர்ந்து வரும் 16ம் தேதி டெல்லி ராம்லீலா மைதானத்தில் நடைபெறும் பதவியேற்பு விழாவில், அரவிந்த் கெஜ்ரிவால் தொடர்ந்து 3வது முறையாக டெல்லி முதலமைச்சராக பதவியேற்கிறார்.

முன்னதாக இந்த விழாவில் டெல்லி மக்கள் மட்டுமே பங்கேற்பார்கள் என்றும், பிற மாநில முதலமைச்சர்களுக்கோ, அரசியல் கட்சித் தலைவர்களுக்கோ அழைப்பு விடுக்கப்படாது என்றும் கூறப்பட்டது. இந்நிலையில் பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்கு, பிரதமர் மோடிக்கு அரவிந்த் கெஜ்ரிவால் அழைப்பு விடுத்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments